Published : 03 Jan 2015 11:45 AM
Last Updated : 03 Jan 2015 11:45 AM
உயர் நீதிமன்றத்தில் ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் விசாரிக் கப்படும் வழக்குகள் மற்றும் அவற்றின் நிலை குறித்து ஆன் லைனில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் போர்டுகளுக்குப் பதிலாக புதிதாக அமைக்கப்படும் மெகா சைஸ் எல்சிடி டிவிகளில் வழக்குகளின் விவரங்களை ஒளிபரப்பவும் ஏற் பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கின் எண் மற்றும் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட வழக்கின் நிலை, பிற நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கின் எண் ஆகியவை ஒவ்வொரு நீதிமன்றங்களுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளில் ஒளிபரப்பப் படுகிறது.
இந்த டிஜிட்டல் போர்டுகளுக் குப் பதிலாக தற்போது டிவிக்கள் பொருத்தப்பட்டு, அதில் அனைத்து நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்படும் வழக்கின் எண், விசாரணை முடிந்த வழக்கின் நிலை ஆகிய விவரங்களை ஒளிபரப்ப ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இப்புதிய வசதியில் நீதிமன்ற அறைகளிலும் டிவி வைக்கப்பட்டு வழக்கின் விவரங்கள் ஒளிபரப்பப்படும்.
இதனால் வழக்கறிஞர்கள் வழக்கின் விவரங்களை தெரிந்து கொள்ள நீதிமன்ற அறைக்கு வெளியே வர வேண்டியதில்லை. உள்ளே இருந்தபடியே டிவிகளில் வழக்குகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதிக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அறைகளுக்கு வெளியே தற்போதுள்ள டிஜிட்டல் போர்டுகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக 28 இஞ்ச் எல்சிடி டிவிக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற அரங்கின் உள்ளே 46 இஞ்ச் டிவி, தகவல் மையம், இரண்டாவது மாடி, வழக்கறிஞர்கள் அறை அமைந்திருக்கும் கட்டிடத்தில் இரு இடங்களில் 65 இஞ்ச் எல்சிடி டிவி அமைக்கப்படுகிறது. இதுதவிர வழக்குகளின் விவரங்களை உடனுக்குடன் ஆன்லைனில் தெரிந்துகொள்ளும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் உயர் நீதிமன்றத்தில் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படும் வழக்குகளின் விவரங்கள், முந்தைய வழக்குகளின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வசதி சென்னை உயர் நீதிமன்றத் தில் சோதனை அடிப்படையில் அமலில் உள்ளது. விரைவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை யிலும் அமலாகிறது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பணிகளை கணினிமயப்படுத்துவதற்கான குழுவின் தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறும்போது, “இந்த நவீன வசதிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்தில் அமலுக்கு வந்துவிட வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன” என்றார்.
இந்த நவீன வசதிகள் அமலுக்கு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வழக்கறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT