Published : 03 Apr 2014 11:11 AM
Last Updated : 03 Apr 2014 11:11 AM
மாடி ஏறி வர முடியாத நிலையில் கடலூரில் ஆட்சியரை கீழே வரவழைத்து மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் திட்டக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். புதன்கிழமை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். உடன் ஏராளமான மாற்றுத் திறனாளிகளும் வந்தனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடம் மாடியில் இருந்ததால், தங்களால் படி ஏறி வர இயலாது. எனவே ஆட்சியர் கீழே இருந்து வந்து மனுவை பெற்றுச் செல்லவேண்டும் என அப்போது அவர்கள் கோரினர்.
ஆனால் ஆட்சியர் வரமறுத்து கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இதை ஏற்காத மாற்றுத் திறனாளிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தான் வேட்புமனுத் தாக்கல் செய்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து கீழிறங்கி வந்த ஆட்சியர், வேட்பாளரிடம் மனுவைப் பெற்றுக் கொண்டு, வேட்பாளரை ஆதரித்து முன்மொழியக் கூடிய 10 நபர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு, முன்மொழிபவர்களில் ஒருவரை மட்டும் கையொப்பமிட மேலே அழைத்துச் சென்றார். இதை யடுத்து மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT