Published : 01 Jan 2015 10:57 AM
Last Updated : 01 Jan 2015 10:57 AM
புத்தாண்டு தினத்தை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாடி வரவேற்றனர். நள்ளிர வில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். முக்கிய கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இன்று புத்தாண்டு 2015 பிறந்தது. இதையொட்டி நேற்று நள்ளிரவில் தமிழகத்தின் பல பகுதி களிலும் புத்தாண்டு கொண்டாட் டங்கள் களைகட்டின. இரவு 12 மணிக்கு தெருக்களில் மக்கள் திரண்டு பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் இனிப்பு வழங்கியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புத்தாண்டை உற் சாகத்துடன் கொண்டாடினர்.
புத்தாண்டையொட்டி முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் இன்று வைகுண்ட ஏகாதசி என்பதால் பெருமாள் கோயில்களில் அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதற்காக நேற்றிரவு முதலே கோயில்களில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் இரவு 11.30 மணிக்கு நடை திறக் கப்பட்டு கோ பூஜை நடத்தப் பட்டது. அதேபோல பழநி முருகன், மதுரை மீனாட்சி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்றிரவு புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடந்தது. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நடந்த புத்தாண்டு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT