Published : 19 Jan 2015 10:20 AM
Last Updated : 19 Jan 2015 10:20 AM
நாடோடிகளை நாகரிகப் பாதைக்கு அழைத்துவரும் நெடிய முயற்சிகளில் இன்னும் வெற்றிக்கொடி நாட்ட முடியாத நிலை நீடிக்கிறது. ஆனால் அவர்களது வாரிசுகளுக்கு கல்வி, சுத்தம், சுகாதாரத்தை கற்றுக்கொடுக்கும் பணிகள், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் மேற்கொள்ளப்படுவது கவனிக்க வேண்டிய அம்சம்.
வள்ளியூர் பஸ் நிலையத்தி லிருந்து 1 கி.மீ. தொலைவில் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி அமைந்திருக்கிறது. இங்கு குடியேறு முன் கடந்த பல ஆண்டுகளாகவே நரிக்குறவர்கள் மழைக்கும், வெயிலுக்கும் வள்ளியூர் பஸ் நிலையத்தில் தஞ்சம் புகுவது வழக்கமாக இருந்தது. பஸ் நிலையத்தையே தங்கள் குடியிருப் பாக மாற்றியதால் பயணிகளும், வர்த்தகர்களும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. நரிக்குறவர் குடும்பங்களை போலீஸார் அடித்து விரட்டும் சம்பவங்களும் அன்றாடம் அரங்கேறிவந்தன.
இதையடுத்து தன்னார்வ அமைப்புகள் தலையிட்டு நரிக்குறவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தன. அதன்விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் அப் போதைய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இவர்களுக்கென்று தற்காலிக குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன. குடியிருப்புகளுக்கு இவர்கள் வந்தாலும் தங்கள் பழக்க வழக்கங் களில் மாற்றங்களை கொண்டு வரமுடியவில்லை. அதில் முக்கிய பிரச்சினையாக நீடிப்பது குழந்தை திருமணம்.
இப்பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் முயற்சியாக இந்த குடியிருப் பில் இருந்து குழந்தைகள் பள்ளி களுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். ஆனால் இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் ஓரளவுக்கே வெற்றி கிடைத்தது. ஆரம்பத்தில் 40 குழந்தை கள் பள்ளிக்கு வந்தாலும், பாதி பேருக்கு மேல் இடைநின்றுவிட்டு, ஊர்ஊராக தங்கள் குடும்பத்தின ருடன் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் முயற்சி யால் 2011 ஜூன் 1-ம் தேதி முதல் வள்ளியூர் அருகே கோட்டையடி என்ற இடத்தில் செயல்படும் அருளையா நடுநிலைப் பள்ளியோடு சேர்ந்து உண்டு உறைவிடப் பள்ளியாக நரிக்குற வர் சமுதாயத்தை சேர்ந்த பிள்ளை களுக்கான கல்வி நிலையம் தொடங்கப்பட்டது.
தங்கும் வசதி
இங்கு சேர்க்கப்பட்ட பிள்ளை களுக்கு தொடக்கத்தில் முடிவெட்டி, குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, பொதுவான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவதற்கு தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் படாதபாடுபட வேண்டியிருந்தது.
இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் அளித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் அரசின் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் தங்க வைக்கப்படும் இடத்தில் மருத்துவ உதவிகள், மருந்துகள், ஆடைகள், பெட்டிகள், டெஸ்க், பெஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் வள்ளியூர் இன்னர் வீல் கிளப், சென்ட்ரல் ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் வழங்குகின் றனர். இவர்களுக்கென்று மாதம் ஒருமுறை மருத்துவ முகாமை நடத்தி வருகிறார் வள்ளியூர் டாக்டர் குமரமுருகன்.
மெட்ரிக் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பிறந்த நாள் கொண்டாடி இனிப்புகள் வழங்குவது போல், நரிக்குறவர்களின் பிள்ளை களுக்கு பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடும் வழக்கம் இப்பள்ளியில் இருப்பது குறிப்பிடத் தக்கது. இவர்களுக்கென்று புகைப் படத்துடன் அடையாள அட்டைகள், வாரத்தில் 3 வண்ணச் சீருடைகள், மாணவர்களுக்கான டைரி ஆகியவை வழங்கப்பட்டிருக்கின் றன. கம்ப்யூட்டர், டிவி எல்லாம் இவர்களுக்கு இருக்கின்றன. சைக்கிள் ஓட்டுதல், செஸ் விளையாட்டு போன்றவையும் கற்பிக் கப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளில் இந்த பிள்ளைகளும் பங்கேற்று அசத்துகிறார்கள்.
தற்போது வள்ளியூர் மட்டுமின்றி, திருநெல்வேலி அருகே பேட்டையிலுள்ள நரிக்குறவர் காலனியிலிருந்தும் நாடோடிகளின் வாரிசுகள் இங்கு வந்து தங்கி படிக்கின்றனர். 62 பேர் வரை பள்ளியில் படித்துவருவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் அவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் தங்கள் பெற்றோருடன் விழாக் காலங்களில் ஊசி, பாசி, மாலைகள் விற்க சென்றுவிடுகிறார்கள்.
இதுகுறித்து அருளையா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு. ராமசுப்பிரமணியன் கூறியபோது, ‘‘தற்போது இந்த மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று ஒழுக்கம், சுத்தம் ஆகியவற்றில் மற்ற மாணவர்களைப்போல் சிறந்து விளங்குகிறார்கள். மற்ற மாணவர்களைப்போல் அடிப்படை கல்வியை தொடக்கத்தில் அளிக் கிறோம். அதன்பின் அவர்களது திறனுக்கு ஏற்ப வகுப்புகளில் சேர்க்கிறோம். பல்வேறு கட்டங் களை தாண்டி, அவர்களுக்கு ஆரம்ப கல்வி அளிப்பது வரையில் வெற்றி பெற்றிருக்கிறோம். வெளியிடங்களுக்கு செல்லும்போது பஸ்களில் பெயர்களை வாசித்து தங்களது பெற்றோருக்கு வழிகாட் டும் அளவுக்கு பலர் முன்னேறி யிருப்பது மகிழ்ச்சியான விஷயம்’’ என்றார்.
நாடோடிகளின் வாரிசுகளுக்காக முன்மாதிரியாக நடத்தப்படும் இந்த பள்ளியைப்போல் தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலும் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினால், கல்வியால் இச்சமூகம் பெரும் மாற்றத்தை காணும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT