Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி உருவானால், வெளிநாட்டு வங்கி களில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவின் நாடாளுமன்றத் தேர் தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளி யிட்டார். அதில், தமிழகத்துக்கான பிரச்சினைகள் மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கும் முக்கி யத்துவம் அளித்து வாக்குறுதிகள் அளிக் கப்பட்டுள்ளன.
இதுபற்றி நிருபர்களிடம் ஜெய லலிதா கூறுகையில், ‘‘இந்தத் தேர் தல் அறிக்கையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றதுக்காகவும் பல திட்டங் களையும் வாக்குறுதிகளையும் அளித் திருக்கிறோம்” என்றார்.
‘நாட்டின் வளத்துக்காக திடமான முடிவுகளை எடுத்திட உறுதியான, துணிச்சலான, வலிமையான தலைமை தேவை. அத்தகைய தலைமையை அதிமுக வழங்கும்’ என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தேசிய அளவிலான வாக்குறுதிகள்:
• ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
• மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• 14-வது நிதிக்குழு சுதந்திரமான செயல்பட அனுமதி.
• விரிவான பொருளாதார நிதிக் கொள்கை வகுக்கப்படும்
• உழவர் பாதுகாப்புத் திட்டம், அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும்.
• நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம், உற்பத்தி துறை மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
• காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
• தமிழகத்தில் இடஒதுக்கீட்டுக் கொள் கையைத் தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதேபோன்று அந்தந்த மாநிலங்களின் நிலைமை களுக்கு ஏற்ப, இடஒதுக்கீடு பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நதிகள் நாட்டுடைமை
• நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
• நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற் கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
10 கோடி வேலைவாய்ப்பு
• பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை தனியாருக்கு விற்காமல் இருப்பதை அதிமுக உறுதி செய்யும்.
• ஐ.நா சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிமுக பாடுபடும்.
• மாநில நலன்கள் பாதிக்கப்படாமல், அவற்றை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படும்.
• 5 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
• அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி உருவானால், வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாயை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
• இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் காக தொலைநோக்குத் திட்டம் உருவாக்கப்படும்.
• மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், அட்ட வணைப் பட்டியலில் சேர்க்கப் படுவர்.
• மாநிலங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் நிலக்கரி எடுப்பு முறை மாற்றப்படும்.
ஊதிய விகிதம் மாற்றம்
• ஒரு திறமையான அரசாங்கத்துக்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல் படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT