Published : 17 Jan 2015 12:44 PM
Last Updated : 17 Jan 2015 12:44 PM
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக சென்னை மண்டலத்துக்குட்பட்ட 15 மண்ட லங்களில் போகிக்கு முன்பும், போகியன்றும் காற்று தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் போகிக்கு முந்தைய நாட்களான 8-ம் தேதி காலை 8 மணி வரையும் 9-ம் தேதி காலை 8 மணி வரையும் காற்று தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு 14-ம் தேதி போகியன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் வியாழக் கிழமை காலை 8 மணி வரை காற்று தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கத்திவாக்கம், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தி. நகர், கோடம்பாக்கம், காரம்பாக்கம், மீனம்பாக்கம், பெசன்ட் நகர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் இந்த பகுதிகளில் போகியன்று காற்றில் உள்ள கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவை அனுமதிக்கப்பட்ட 80 மைக்ரோ கிராம் என்ற அளவைவிட குறைவாக இருந்தது.
அதேசமயம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லக்கூடிய மிதக்கும் நுண்துகள்கள் 7 இடங்களில் 200 மைக்ரோ கிராம்/ கன மீட்டர் என்ற அளவுக்கு மேல் இருந்தன. குறிப்பாக பெருங்குடியில் அதிகபட் சமாக 262 மைக்ரோ கிராம்/ கன மீட்டர் என்ற அளவில் சுவாசிக்கும் போது உட்செல்லக் கூடிய மிதக்கும் நுண்துகள்கள் இருந்தன. அதே போல் ராயபுரத்தில் 231 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும், மீனம்பாக்கத்தில் 228 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும், கோடம்பாக் கத்தில் 216 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும், அண்ணாநகரில் 213 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும், தண்டையார்பேட்டையில் 206 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும் காரம்பாக்கத்தில் 204 மைக்ரோ கிராம்/ கன மீட்டரும் இருந்தன.
அம்பத்தூரில் மட்டும் அனுமதிக் கப்பட்ட அளவான 100 மைக்ரோ கிராம்/ கன மீட்டர் என்ற அளவை விட குறைவாக 93 மைக்ரோ கிராம்/ கன மீட்டர் என்ற அளவில் சுவாசிக்கும் போது உட்செல்லக் கூடிய நுண் துகள்கள் இருந்தது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வக துணை இயக்குநர் வீ.சந்திரசேகரன் கூறும்போது, “போகியன்று சுவாசிக்க கூடிய காற்றில் உள்ள நுண்துகள்கள் மட்டும் சற்று கூடுதலாக இருந்தது. இதற்கு அன்றைய தினம் காலை நிலவிய குறைந்த தட்ப வெப்ப நிலை மற்றும் காற்றின் குறைந்த வேகம் ஆகியவை காரணமாகும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT