Published : 12 Jan 2015 10:33 AM
Last Updated : 12 Jan 2015 10:33 AM
முதியோர் உதவித்தொகையை கொண்டுவந்து தருவதில் தாமதம் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதில் குளறுபடி உள்ளிட்டவை குறித்த புகார்களைத் தெரிவிக்க சென்னை வடகோட்டம் தபால் அலுவலகம் சார்பில் குறைதீர்வு முகாம் நாளை நடக்கவுள்ளது.
இது குறித்து இந்திய அஞ்சல் துறையின் சென்னை வடகோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கே.ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசின் முதியோர் உதவித் தொகை, அஞ்சலகங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதை வழங்குவதில் அஞ்சலக ஊழியர்கள் முறைகேடு செய்வது, உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது போன்றவை குறித்து புகார் தெரிவிக்க சிறப்பு குறைதீர்வு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் நாளை காலை 10 மணிக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய நாதர் ஆலயத்தில் நடைபெறுகிறது. முகாமில் புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே பயனாளிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் முதியோர் உதவித்தொகை பணப்பட்டுவாடா குறித்த தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT