Published : 07 Jan 2015 09:52 AM
Last Updated : 07 Jan 2015 09:52 AM
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் மகப்பேறு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களில் பெண் உயிர் இழந்தார்.
அவரது உடல் 2 மருத்துவர் கள் அடங்கிய குழுவால் பிரேதப் பரிசோதனை செய்யப் பட்டது.
வேலூர் மாவட்டம், சோளிங் கரை அடுத்த சைனபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பெருமாள்- சாவித்ரி (28). இவர் களுக்கு மகன், மகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சாவித்ரி, பிரசவத்துக்காக ஆட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கிருந்த செவிலியர்கள் அறிவுறுத்தலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாவித்ரி சேர்க்கப்பட்டார்.
அங்கு, சாவித்ரிக்கு மகப்பேறு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்- சேயும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். வார்டுக்கு வந்த சிறிது நேரத்தில் சாவித்ரி திடீரென குளிர் தாளாமல் நடுங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து, அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாம். தகவலறிந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் சாவித்ரி உயிரிழந்தார்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் சாவித்ரி உயிரிழந்தார் என்று கூறி, அவரது உறவினர்கள் மருத் துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸாரும், கோட்டாட்சியரும் அவர்களை சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து சாவித்ரியின் உறவினர்கள் கூறும்போது, ‘அறுவைச் சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில், சாவித்ரிக்கு கடும் குளிர் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் சாவித்ரிக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சாவித்ரியின் கணவரிடம் மருத்துவர்கள் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்து பெற்றனர். பின்னர், சாவித்ரி இறந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சாவித்ரி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது’ என்றனர்.
செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘சாவித்ரி உறவினர்களின் கோரிக் கையை ஏற்று, அவரது உடலை வேறு இரு மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனை (பொறுப்பு) முதல்வர் கூறும்போது, ‘பிரேதப் பரி சோதனையின் முடிவில்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT