Published : 20 Jan 2015 12:58 PM
Last Updated : 20 Jan 2015 12:58 PM

கோவை, திருப்பூரில் 14 வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை, திருப்பூரில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 1.25 லட்சம் விசைத்தறிகள் 14வது நாளாக இன்றும் முடக்கப்பட்டுள்ளன.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

அரசு வழங்கும் மானியத்தை ஒழுங்கு முறை ஆணையம் வழங்கவில்லை . இதுகுறித்து முதல்வரிடம் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை என்று விசைத்தறியாளார்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மின் கட்டண மானிய விவகாரம் குறித்து தனியாக குழு அமைக்க விசைத்தறியாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் 220கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x