Published : 20 Jan 2015 09:00 AM
Last Updated : 20 Jan 2015 09:00 AM
ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற் றுள்ளனர். அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர்கள் கிரிராஜன், பலராமன் ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
‘ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், இறந்த வர்கள் என சுமார் 9 ஆயிரம் பேர் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். இதற்கான ஆதாரங்களை அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் அளித்துள் ளோம். எனவே, போலி வாக்காளர் களை நீக்க உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வாக் காளர் பட்டியல் கடந்த 5 ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் போலி வாக்காளர்கள் சேர்க்கப் பட்டது குறித்து, திமுக சார்பில் ஏற்கெனவே புகார் கொடுக்க திட்டமிட்டிருந்தோம். அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரம் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது.
இப்போது ஸ்ரீரங்கம் தொகுதியில், 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதை ஆதாரத்துடன் பட்டியலிட்டுள்ளோம். ஒரு வாக்காளருக்கு 2 இடத்தில் ஓட்டு உள்ளது.
இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் படாமல் உள்ளது. முகவரி மாறி சென்றவர்களின் பெயர் களும் நீக்கப்படவில்லை. இந்த விவரங்களை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.
போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே அங்கு தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், 9 ஆயிரம் பேரும் ஓட்டு போட முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT