Published : 10 Jan 2015 10:34 AM
Last Updated : 10 Jan 2015 10:34 AM

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: பிரபலத்தை களமிறக்க அதிமுக திட்டம்?

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பிரபலமான ஒருவரை களமிறக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வராகவும் பொறுப் பேற்று மூன்றாண்டுகள் ஆட்சியை நடத்தி வந்த நிலையில், வருமா னத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையின் காரணமாக தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. தற்போது இந்த தொகுதிக்கான தேர்தல் அதிகாரியை நியமித்து, இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் முனைப்புகாட்டி வருகிறது.

ஏற்கெனவே, ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, முதல்வர் பதவியில் அவர் இல்லாவிட்டாலும், மக்கள் தங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் தமிழக தலைமைச் செயலரும், தற்போது தமிழக அரசின் ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரான ஷீலா பாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக முன்பு பேச்சு அடிபட்டது.

இந்தநிலையில், ஓய்வு பெற்ற டிஜிபி ஒருவரின் பெயரை அதிமுக தலைமை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

மேலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அமைச்சராக இருந்த கே.கே.பால சுப்பிரமணியன் மீண்டும் இங்கு போட்டியிட வாய்ப்பு கேட்பதாகவும், 2009-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டி யிட்டு தோல்வியைத் தழுவி யதாலும், சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாலும் இவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறுகிறது ஒரு தரப்பு.

இதுதவிர, திருச்சி மாநகராட் சியில் கோட்டத் தலைவராக உள்ள ஒருவரை மாவட்டச் செயலர் ஒருவர் பரிந்துரை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே திருச்சி மாநகராட்சி மேயராக உள்ள அ.ஜெயாவை, வேட்பாளராக அறிவிக்கப் போகிறார்கள் என்ற பேச்சும் அதிமுக வட்டாரங்களில் உலவுகிறது.

முன்னாள் டிஜிபி-க்கு வாய்ப்பு

இருப்பினும், முன்னாள் டிஜிபி-க்கு அதிக வாய்ப்பிருப்ப தாகத் தெரிகிறது. தான் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் யாரை நிறுத் தினால் பொருத்தமாக இருக்கும் என்பது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு தெரியும். அவர் நிறுத்தும் வேட் பாளரை நாங்கள் வெற்றி பெறச் செய்ய உழைப்போம் என்கிறது திருச்சி அதிமுக வட்டாரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x