Published : 07 Jan 2015 09:50 AM
Last Updated : 07 Jan 2015 09:50 AM
அம்மா மலிவு விலை சிமென்ட் மூட்டைகள் கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுப்பதற்காக, வழக்க மான நிறத்தைத் தவிர்த்து, புதிய நிறத்தில் சிமென்ட் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மலிவு விலை சிமென்ட் வாங்க, வங்கி வரைவோலை கொண்டு வரவும் அரசு ஆணையிட்டுள்ளது.
அம்மா சிமென்ட் திட்டம் நேற்று திருச்சியில் தொடங்கப்பட்டது. 50 கிலோ எடையிலான ஒரு சிமென்ட் மூட்டை வரிகள் சேர்த்து ரூ. 190-க்கு விற்கப்படும்.
வீடு கட்டுவதற்கு 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம், 500 சதுர அடிக்கு 250 மூட்டைகள், 501 முதல் 1,000 சதுர அடிக்கு 500 மூட்டைகள், 1001 முதல் 1,500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் அதிகபட்சமாக விற்பனை செய்யப் படும். ஒரு நாளைக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 50 மூட்டைகளே கிடைக்கும்.
தமிழ்நாடு சிமென்ட் கழகம் குறிப்பிடும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதியி லுள்ள தமிழ்நாடு சிமென்ட் லிமிடெட் அல்லது அரசுத் துறை யின் அறிவிக்கப்பட்ட சிமென்ட் கிடங்குக்கு சென்று கொடுத்து, சிமென்ட் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற அரசு வேலை நாட்களில் சிமென்ட் விநியோகம் செய்யப்படும்.
மலிவு விலையில் அம்மா சிமென்ட்டை வாங்கி, கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க தனி நிறத்தில் அம்மா சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக குறிப்பிட்ட ஆலைகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட் டந்தோறும் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தால் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, சட்டவிரோதமாக அம்மா சிமென்ட் விற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் 2 லட்சம் மெட்ரிக் டன் அம்மா சிமென்ட் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களுக்கு சிமென்ட் இருப்பு இல்லை என்று கூறாதவகை யில், எப்போதும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும் கிடங்கின் பொறுப்பாளர் தினமும் சிமென்ட் இருப்பு விவரம், முந்தைய நாள் இருப்பு, விற்பனை, புதிய சரக்கு வரும் விவரம் ஆகியவற்றை அறிவிப்புப் பலகையில் தெளி வாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலிவு விலை சிமென்ட் விற்பனை தொடர்பாக பொது மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் புகார்களைப் பதிவு செய்ய கட்டண மில்லா பொதுத் தொலைபேசி எண் விரைவில் உருவாக்கப் படும். இவ்வாறு தமிழக தொழிற்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT