Published : 03 Jan 2015 11:00 AM
Last Updated : 03 Jan 2015 11:00 AM
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற இருந்தது.
அப்போது, சென்னை புழல் சிறைத்துறை குடியிருப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை வார்டன் வைரவன்(60), சுவாமி தரிசனம் செய்ய ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தார். நாழிகேட்டான் வாசல் அருகே வந்தபோது நெரிசலில் மூச்சுத்திணறி வைரவன் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைரவனை பரிசோதித்த மருத்துவர், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
நம்பெருமாள் புறப்பாடு தொடங்க இருந்த நேரத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பஞ்ச கவ்ய புரோஷணம், பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT