Published : 07 Apr 2014 10:28 AM
Last Updated : 07 Apr 2014 10:28 AM

தேர்தல் அறிக்கைகள் வெறும் சம்பிரதாயமே!- விவாத நிகழ்ச்சியில் சி.மகேந்திரன் பேச்சு

கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் என்பது வெறும் சம்பிரதாயத்துக்கும் ஓட்டு வாங்கவும் மட்டுமே என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில இணைச் செயலாளர் மகேந்திரன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி மாணவர் ஆசிரியர் சமூக இயக்கம் சார்பில், ‘மக்களின் எதிர்பார்ப்புகளும் தேர்தல் அறிக்கைகளின் நம்பகத் தன்மையும் - அரசியல் கட்சிகளின் விளக்கங்கள்’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி, சென்னை எழும் பூரில் உள்ள இக்சா மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இதில் அதிமுக சார்பில் பங்கேற்ற ஆவடி குமார் பேசுகையில், ‘‘இந்தத் தேர்தல், நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் ஆளும் அரசால் உலக அளவில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. இதனால், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில கட்சிகள் நாட்டை ஆள முடியும் என்பதை வைத்தே அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்’’ என்றார்.

திமுக வழக்கறிஞர் அணி யைச் சேர்ந்த பிரசன்னா பேசுகையில், ‘‘தொண்டர்களை மதிக்கும் கட்சி திமுக. மக்களின் துயரத்தை போக்கும் விதத்தில், மக்களுக்கான நல்ல திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதுவரை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை திமுக நிறைவேற்றியுள்ளது’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில இணைச் செயலாளர் மகேந்திரன் பேசியதாவது:

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கை கள் சடங்கு களாகவும் சம்பிரதாயங் களாக வும் மட்டுமே உள்ளன. ஓட்டு வாங்கவே தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. சுதந் திரத்துக் குப் பிறகு பொருளாதாரம், தனி மனித வருமானம் உயர்ந்துள்ளது. ஆனால், ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

தேர்தலில் 100 வாக்குகள் பெற்றால் வெற்றி, அவருக்கு 100 மதிப்பெண். 99 வாக்குகள் பெற்றால் தோல்வி, அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண். இந்த தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். கட்சி, சின்னம் அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். எந்த கட்சி மொத்தமாக அதிக வாக்குகள் பெறுகிறதோ, அந்தக் கட்சிக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இவ்வாறு மகேந்திரன் பேசினார்.

மதிமுக சார்பில் தொழிற்சங்க செயலாளர் அந்திரிதாஸ், காங்கிரஸ் சார்பில் செய்தித் தொடர் பாளர் அமெரிக்கை வி.நாராய ணன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநில பிரச்சாரக்குழு உறுப்பினர் ஜெயராம் வெங்கடேசன் உள்பட பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x