Published : 29 Jan 2015 10:21 AM
Last Updated : 29 Jan 2015 10:21 AM

தமிழகத்தில் 11 புதிய ரோந்து மையங்கள்: கடலோர பாதுகாப்புப் படை ஐ.ஜி. தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் வசிக் கும் மீனவ கிராம மக்களிடம், கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வழியே ஊடுருவல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராம மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமப் பகுதியில், கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப் படை ஐ.ஜி. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மீனவர்களின் குறைகளும் கேட்டறியப்பட்டன. தென்மேற்கு மீனவ பேரமைப்பு சார்பில் பேசிய மீனவர்கள், ‘மீனவர்கள் குழுவாக கடலுக் குள் செல்ல வேண்டும் என்று கடலோர பாதுகாப்புப் படை யினர் அறிவுறுத்துகின்றனர். மீனவர்கள் குழுவாக சென்று மீன்பிடிப்பதென்பது இயலாத காரியமாகும்.

படகுகளில் ஜிபிஎஸ் கரு வியை பொருத்தும்படி தெரிவிக் கின்றனர். எந்த மாதிரியான படகுகளில், எந்த வகையிலான ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண் டுக்கு சராசரியாக 168 பேர் கடலில் இறப்பதாக அரசு தெரிவிக்கிறது. மீனவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உயிர்காப்பு சட்டைகள் (லைப் ஜாக்கெட்) தரமில்லாமல் உள் ளன. அதிகாரிகள் இதை சோதித்து பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்டோ ருக்கு அரசு வழங்கிய வீடு களுக்கு, வீட்டுமனை பட்டா கொடுக்கப்படவில்லை என ஆட்சியரிடம் மீனவர்கள் முறை யிட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூட்டத்தில் பேசியதாவது: மீனவ மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்காக கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் வருவாய்த் துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார்.

தமிழ்நாடு கடலோர பாதுகாப் புப் படை ஐ.ஜி.சொக்கலிங்கம் பேசியதாவது: இந்த விழிப்புணர்வு கூட்டத்தின் நோக்கம், கடல் வழியாக ஊடுருவும் அந்நியர்கள் குறித்து, மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே ஆகும். மீனவ மக்கள் தங்கள் பகுதியில் நடமாடும் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து, கடலோர பாதுகாப்புப் படையின், 1093 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப் படை ஐ.ஜி.சொக்கலிங்கம் ‘தி இந்துவிடம்’ கூறியதாவது: தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக, கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், முதல் கட்டமாக ரோந்து படகுகளை நிறுத்தி கண்காணிக்க, 11 இடங்களில் ரோந்து மையங்கள் அமைக்கப் படும். கல்பாக்கம் பகுதியிலும் ரோந்து மையம் அமைக்கப்பட உள்ளது. கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் அமைக்க, கோவளம், முதலியார் குப்பம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், புதுப்பட்டினம் பகுதியில் காவல்நிலையம் அமைப்பதற்காக தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x