Published : 13 Jan 2015 09:09 PM
Last Updated : 13 Jan 2015 09:09 PM
கச்சத்தீவு அருகே இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்ட தமிழக மீனவர்களின் இரண்டு படகுகளை ஊர்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்கிழமை விடுவித்து.
கடந்த டிசம்பர் 28 அன்று மண்டபத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்தது.
படகை சரி செய்ய முயன்றும் இயலாமல் போனதால் படகில் இருந்த 4 மீனவர்களை மீட்கச் சென்ற நாகராஜ் என்பவரது விசைப்படகையும் அதிலிருந்து மீனவர்கள் 4 என 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நெடுந்தீவு காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மீனவர்களை சிறையில் அடைக்காமல் விடுவித்ததை தொடர்ந்து டிசம்பர் 31 அன்று மீனவர்கள் மட்டும் மண்டபம் திரும்பினர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் தரப்பில் இரண்டு விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி யாழ்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இரண்டு விசைப்படகுகளையும் தமிழக மீனவர்களிடமும் ஒப்படைக்க உத்திரவிட்டார்.
முன்னதாக கடந்த ஜுலை மாதத்திலிருந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 87 விசைப்படகுகள் இலங்கையில் உள்ளன. இவற்றை புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேனா இந்திய வருகையையோட்டி விரைவில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT