Published : 25 Feb 2014 08:26 AM
Last Updated : 25 Feb 2014 08:26 AM

அதிமுக பட்டியலில் ஆச்சரியப்பட வைக்கும் வேட்பாளர்கள்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இந்த முறை கட்சியின் உண்மை விசுவாசிகள் அடையாளம் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரம், ஒரு சிலருக்கு வேட்பாளர் யோகம் அடித்திருப்பதை அதிமுகவினர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா, மாநிலங்களவை தேர்தலில் தனக்கே வாய்ப்பு என்று நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு நழுவிப் போனது. ஆனால், மாவட்டக் கழகத்தி லிருந்து சிபாரிசு செய்யப்பட்ட மூன்று பேர் பட்டியலில் அன்வர் ராஜாவின் பெயரே இல்லை. இந்நிலையில் சிறு பான்மையினர் கோட்டாவில் அவரைத் தேடிவந்திருக்கிறது வாய்ப்பு.

திருச்சியின் தற்போதைய எம்.பி-யான குமாரையும் அந்த மாவட்டக் கழகத்திலிருந்து தலைமைக்கு சிபாரிசு செய்யவில்லை. விஷயம் தெரிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து கடிந்து கொண்ட ஜெயலலிதா, குமார் பெயரையும் சேர்த்து புதிதாக மூவர் பெயர் கொண்ட பட்டியலை கேட்டு வாங்கி இருக்கிறார். அப்போதே குமார்தான் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சிவகங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள செந்தில்நாதன் ஐந்து மாதங்களுக்கு முன்பே தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டார். அந்தளவுக்கு உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.

மதுரையில், யாதவரான மதுரை துணை மேயர் கோபால கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். துணை மேயருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே இவரை வியப்புடன் பார்த்தது மதுரை அதிமுக. வளம் கொழிக்கும் துறையை கவனித்து வந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் உறவுக்காரர் கோபாலகிருஷ்ணன். அதிகாரிக்கும் நால்வரணி அமைச்சர் ஒருவருக்கும் நெருக்கம். ஒருவேளை மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் கோபால கிருஷ்ணனுக்கு வேறொரு வழியில் அதிர்ஷ்டம் நிச்சயம் என்கிறார்கள்.

தென்சென்னை வேட்பாளராக பட்டியலில் இடம் பிடித்திருக்கும் டாக்டர் ஜெயவர்தன் யார் தெரியுமா? அதிக அதிகாரம் காட்டியதால் கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட் டிருந்த முன்னாள் சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமாரின் மகன். வட சென்னை தொகுதியில் தான் ஜெயவர்தனின் சமூகத்தவர்களான மீனவ குடிகள் அதிகம் உள்ளனர். ஆனால், அந்தத் தொகுதி தோழர் களுக்கு போய்விடும் என்பதால் தென் சென்னையில் ஜெயவர்தனுக்கு சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

ஈரோடு தொகுதிக்கு செல்வக் குமார் சின்னையனை வேட்பா ளராக அறிவித்ததன் பின்னணியிலும் நால்வரணி முக்கிய அமைச்சர் ஒருவரின் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கொங்கு மண்ட லத்தில் பதவி பறிக்கப்பட்ட கனமான துறையின் அமைச்சர் ஒருவரின் செயல்பாடுகள் குறித்த ஆதாரங்களை நால்வரணிக்கு திரட்டிக் கொடுத்ததில் செல்வக்குமார் பெரும்பங்கு ஆற்றி னாராம். அதற்கு கிடைத்த பரிசுதான் வேட்பாளர் அந்தஸ்து என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x