Published : 10 Jan 2015 10:44 AM
Last Updated : 10 Jan 2015 10:44 AM
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்ற போது நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது. தற்போது, இது பூஜ்யத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்தார்.
அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மற்றும் சதர்ன் பில்டர்ஸ் அறக் கட்டளை சார்பில், ‘பைகான்-2015’ என்ற கட்டுமான உபகரணங்கள் தொழில் நுட்ப பொருட்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங் கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கைய்யா நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 130 மையங் களில் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர் தின விழாவில் பேசிய போது, அடுத்த பத்து ஆண்டு களில் இந்தியா சர்வதேச அளவில் வல்லரசாக திகழும் எனக் கூறியுள் ளார். அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்கா கவும், உள்நாட்டு வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும் வேண்டி மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றபோது நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது. தற்போது, இது பூஜ்யத்தை அடையும் நிலை ஏற் பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு நீண்ட நாட்களாகியும் இது வரை நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மற்ற துறைகளை விட கட்டுமான துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியா நகரமயமாக்கத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் சிறந்த மருத்துவ சேவைக்காக மக்கள் நகரங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். இதற்காக, மத்திய அரசு நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்கள் மற்றும் 500 நகரங்களில் வளர்ச்சிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு வெங்கைய்யா நாயுடு கூறினார்.
முன்னதாக, அவர் அளித்த பேட்டி யில், மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்ப்பதிலேயே எதிர்க் கட்சிகள் குறிக்கோளாய் உள்ளன.
இலங்கையில் 13வது அரசியல் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
இலங்கை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள புதிய அதிபர் தமிழர்களின் நலன் கருதி செயல்பட வேண்டும். அதே போல், இந்தியா-இலங்கை இடையே நல்லுறவு ஏற்படுத்த அவர் முயற்சி மேற் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், பைகான் அமைப்பின் தலைவர் சுசாந்த குமார் பாசு, முன்னாள் தலைவர் சீநையா, சதர்ன் பில்டர்ஸ் அறக்கட்டளை தலைவர் ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT