Published : 24 Jan 2015 09:11 AM
Last Updated : 24 Jan 2015 09:11 AM
கேரளம் மற்றும் கர்நாடகத்தை போன்று மாநிலப் பிரச்சினை களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடுவது இல்லை என்ற ஆதங்கம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே ஏற் பட்டுள்ளது. இதனால், காவிரி நதிநீர் விவகாரத்துக்காக வரும் 28-ம் தேதி சென்னையில் நடை பெறும் போராட்டத்தில் ஆளும் அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளையும் பங்கேற்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மாநில பிரச்சினைகளில் அரசியல் பேதம் மறந்து இணைந்து செயல்படு கின்றனர். அவர்கள் முல்லை பெரி யாறு உள்ளிட்ட பிரச்சினைக்காக பிரதமர் நரேந்திர மோடியையும் பாலக்காடு கோக- கோலா தொழிலாளர் பிரச்சினைக்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லி யையும் கூட்டாக சந்தித்து முறை யிடுகின்றனர்.
இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினரும் கூட்டாக சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என பிரதமரை வலியுறுத்துகின்றனர்.
பொதுப் பிரச்சினைகளுக்காக அனைத்துக் கட்சியினரும் ஒரே அணியில் திரளும் காட்சிகளை மற்ற மாநிலங்களில் பார்க்க முடி கிறது. கருத்து வேறுபாடுகள், மாறு பட்ட கொள்கைகளைக் கொண் டிருந்தாலும் மாநில நன்மைக்கு என வரும்போது கூட்டாக செயல் படுகின்றனர். இதற்கு உரிய பலனையும் அம்மாநில மக்கள் பெறு கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் இந்த நிலை இல்லை. அண்மையில் நோக் கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப் பட்ட விவகாரத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை யிழந்தனர். இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியே தங்களது எதிர்ப்பை தெரிவித்தாலும் அது மத்திய அரசின் தலையீட்டுக்கு வழிவகுக்க வில்லை. தொழிலாளர் பிரச்சி னையை பொதுப் பிரச்சினையாக ஒன்றிணைந்து அணுகாததால் நோக்கியா விவகாரத்தில் பலன் கிடைக்காமல் நீர்த்துப்போனது.
காவிரி நதி நீர் பிரச்சினை என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. இதில் முக்கிய தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக போராட வேண்டியது அவசியம் என்கிறார் அனைத்து காவிரி-டெல்டா விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழ கத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு குரல் கொடுத் திருந்தால் காவிரிக்காக நாம் இப்படி ஏங்கி நிற்க வேண்டிய நிலை உருவாகியிருக்காது. இப்போது அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். வரும் 28-ம் தேதி, சென்னையில் காவிரிப் பிரச்சினைக்காக நாங்கள் நடத்தவுள்ள போராட் டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர் களையும் ஒன்றுதிரட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
இதன்படி திமுக, தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமாகா, மதிமுக, புதிய தமிழகம், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க சம்மதித்துள்ளனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள் ளோம். ஆளும்கட்சி இணைந்தால் போராட்டம் வலுப்பெறும். மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத் திலும் கூட்டாகப் போராடும் கலாச் சாரம் வரவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT