Published : 24 Jan 2015 07:08 PM
Last Updated : 24 Jan 2015 07:08 PM
தொழிலாளர் நலத்துறையின் முயற்சிகள் ஒருபக்கம் இருந்தபோதிலும், இன்னொரு பக்கம் பல்வேறு தொழில்நிறுவனங்களிலும் இளம் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைத் தொட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக நாடுமுழுவதும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சி இருந்தபோதிலும் சமீபத்தில் வெளியான கணக்கெடுப்பின்படி 1.5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர் இருப்பதை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதேநேரம், தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நாங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு வர்த்தகக் கண்காட்சியில், எங்கள் அரங்கைக் காணவரும் மக்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் உள்ள வாசகங்களைப் ஆர்வத்தோடு படித்துப் பார்த்து பாடுகிறார்கள்.
பொருளாதார காரணங்களால் கட்டாயப்படுத்தி பணியமர்த்தி வேலைவாங்கப்படும் குழந்தைகளை நாங்கள் முயற்சிசெய்து நேரடியாக கண்டுபிடித்துவிடுகிறோம். மாற்றுத் திறனாளி உள்ளிட்ட குழந்தைகள், பெற்றோர் இல்லாததால், இளைய சகோதரர்களைக் காக்கும்பொருட்டு வேலைக்கு வந்தவர்களையும் சேர்த்து 1.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட குழந்தைகள் அருகிலுள்ள தங்கள் கல்வியைப் பயிலும்விதமாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
தமிழகத்தில் ஜவுளி தொழிற்சாலைகளில், பருத்தி எடுக்கப்படும் விவசாயப் பணிகளில்,செங்கல் சூளைகளில், பீடி சுற்றும் வேலைகளில் மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கன்னியாகுமரியில் புதிய நூதன முறைகள்
மேற்கு வங்காளம், ஒடிசா வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வரும் இளம் தொழிலாளர்களைக் கவர்ந்திழுத்து வேலைவாங்கும் நூதன முறை கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலில் மேற்கொள்ளப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளன.
பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு இந்த தொழிலிலிருந்து வெளியேறிவிட்டனர். குறிப்பாக சுனாமிக்குப் பிறகு மற்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வரும் இளைஞர்கள் மீன்பிடித் தொழிலில் நுழைந்திருக்கிறார்கள். பிரதான உணவாக மீனும் அரிசியும் அவர்களுக்கான உணவாக இருப்பதால் இந்த இடம் அவர்களுக்கு நன்றாகப் பொருந்திவிட்டது என்றார் நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலாளர் இன்ஸ்பெக்டர் வி.பழனிசாமி.
புதன் அன்று திரு பழனிச்சாமி குளச்சல் துறைமுகம் அருகே கொட்டில்பாட்டில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை மீட்டுள்ளார். மூன்று பையன்களும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஆதார் அட்டைகள் ஆகியவற்றை வைத்துள்ளனர். மீன்பிடிக்காத மற்றநாட்களில் அவர்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினரோடு சேர்ந்து தின்பண்டம் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்துவது என்பது கடந்த காலங்களில் இது வரை நாம் கேள்விப்பட்டிராத வித்தியாசமான ஒன்றாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT