Published : 21 Jan 2015 09:06 AM
Last Updated : 21 Jan 2015 09:06 AM

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பேரழிவுக்கு அதிகாரிகளின் செயல்பாடே காரணம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வேதனை

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காததே பேரழிவுக்கு காரணமாகிவிட்டது என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நிலையை உருவாக்க வேண்டாம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேதனையுடன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறை கேடு குறித்து சகாயம் 5-ம் கட்ட விசாரணை நடத்தி வருகிறார். மேலூர் தாலுகாவில் உள்ள கீழவளவு, கீழையூர், ரெங்க சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அவர் ஆய்வுகளை மேற் கொண்டார். ஆய்வின்போது, கீழவளவில் உள்ள கூரான்குளத்தில் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருந் ததும், இதன் அருகே இருந்த வெல்லூத்துமலையே காணாமல் போனதுடன், அந்த இடத்தில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் 100 அடிக்கும் மேல் பள்ளமாக இருந்ததும் தெரியவந்தது. இதை யெல்லாம் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்த சகாயம், இந்தப் பகுதியில் குவாரி நடத்திய டாமின் அதிகாரிகளிடம் விசாரித்தார்.

66 அடி உயரத்தில் ஒரு கி.மீ. நீளத்தில் இங்கு இருந்த மலையில் காஷ்மீர் ஒயிட் எனப்படும் தரமான கிரானைட் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, பிஆர்பி நிறுவனம் வெவ்வேறு பெயர்களில் காஷ்மீர் ஒயிட் கற்களை வெட்டி எடுத்துவிட்டது. மலை மட்டுமின்றி அருகில் உள்ள இடமும் ஆக்கிரமித்து தோண்டப்பட்டன. 5.94 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு கூடுதலாக கற்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடப்பதாக டாமின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி சகாயம் கூறிய தாவது: மலையையே வெட்டி காலி செய்யும்வரை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? இதன் மூலம் டாமின் நிறுவனத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது என்ற விவரத்தை அறிக்கையாகத் தாக் கல் செய்ய வேண்டும் என்றார்.

சுட்டிபனையன்குளம், பிள்ளையார்குளம், ஊத்த னேந்தல் பெருஞ்சுனை உள்ளிட்ட கண்மாய்கள் கிரானைட் கழிவுகளை கொட்டி மேடாக்கப் பட்டிருந்தன. கோயிலில் இருந்து 50 மீட்டர், ரோட்டில் இருந்து 10 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் கற்கள் வெட்டப்பட வேண்டும் என அரசாணையில் உள்ளது. ஆனால் இவையெல்லாமே அப்பட்டமாக மீறப்பட்டிருந்ததை சகாயம் பார்வையிட்டார்.

என்.கோவில்பட்டியை சேர்ந்த மனோகரன் உட்பட பலரும் அளித்த புகார் மனுவில், ‘நீதி மன்றம் உத்தரவிட்டும் கண் மாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் 75 ஏக்கரில் விவ சாயம் பாதித்துள்ளது’ என குறிப் பிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் சரியான பதில் தரவில்லை.

மேலும் சகாயம் கூறும்போது, 2 நாட்களில் குறிப்பிட்ட கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தவறினால், அதிகாரிகளின் இதுபோன்ற மோசமான செயல்பாடுதான் இவ்வளவு பேரழிவுக்கும் காரணம் என்கிற புகார்களை ஆதாரமாக்கி நீதிமன்றம் கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x