Published : 18 Jan 2015 12:16 PM
Last Updated : 18 Jan 2015 12:16 PM

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் 2 நாட்களில் அறிவிக்கப்படுவார் - தமிழிசை சவுந்தர்ராஜன் தகவல்

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிப்பதற்காக பாஜக உயர்நிலைக்குழு கூட்டம் கமலாலயத்தில் நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன், தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதித் தோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாவட்ட குழுக்களின் விருப்பம் ஆகும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடனும் கலந்து ஆலோசனை செய்யப் படும். அதைத்தொடர்ந்து கட்சியின் தேசிய தலைமையுடன் ஆலோசித்து ஒப்புதல் பெறப்படும். இன்னும் 2 நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுக, அதிமுக என்ற இரு கழகங்களுக்கு மாற்று சக்தியாக தமிழக மக்கள் பாஜகவை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால்தான் வளர்ச்சியை கொடுக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தேர்தலில் அதிகார பலம் பயன்படுத்தப்படாததை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். திருமங்கலம் உள்ளிட்ட பார்முலாக்கள் இல்லாமல் ஜனநாயகம் என்ற பார்முலா பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் நியாயமான தேர்தல் நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x