Published : 17 Jan 2015 11:38 AM
Last Updated : 17 Jan 2015 11:38 AM
திருவள்ளுவர் பிறந்தநாளை முன்னிட்டு திருக்குறளின் 133 அதிகாரங்களை போற்றும் விதமாக 133 தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.
திருவள்ளுவர் இசை விழா சங்கம் மற்றும் மங்கள இசை கலைஞர்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் இசை விழா சங்கத்தின் குழுத்தலைவர் எஸ். சத்யா, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பார் அசோசியேஷன் தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர் டி.வி. ராமானுஜம், ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தான அறங்காவலர் என். சி. தர், மங்கள இசை கலைஞர்கள் நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் எ.சகாதேவன், தலைவர் பி.சி. ராஜரத்தினம், செயலாளர் எ. குமரேசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவபெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானத்தில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் இசைவிழாவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.மதிவாணன் தொடங்கி வைத்தார். அடுத்தபடம்: 133 தவில் மற்றும் 133 நாதஸ்வரக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசைக்கும் இசைக் கச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT