Published : 27 Dec 2014 10:32 AM
Last Updated : 27 Dec 2014 10:32 AM

உடுமலை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 முக முருகன் சிலை கண்டெடுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 600 ஆண்டுகளுக்கு முந்தைய 6 முகங்களுடன் கூடிய முருகன், நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலையில் உள்ளது கொங்கூர் கிராமம். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முகா நதிக் கரையில் இக் கிராமம் அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற் றைக் கொண்ட இக் கிராமத்தில் வைணவ சமயத்தைப் பின்பற்றிய ராமானுஜர் வந்து சென்றதாக கொங்கு மண்டல சதகம் எனும் வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த கிராமம் வழியாக ஓடும் சண்முகா நதிக் கரையோரம் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய முருகன் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. இச் சிலை 6 முகங்கள், 12 கைகளுடனும், மயில் வாகனம் மீது முருகன் வீற்றிருக்கும் நிலையில் உள்ளது.

வழிபாடு செய்யும்போது தீப ஒளிபட்டால் பின்புறம் உள்ள தலை இச் சிலைக்குப் பின்னால் உள்ள கண்ணாடியில் தெரியும் வகையில் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். இச் சிலைக்கு அருகே ஒரு நந்தி சிலையும் உள்ளது. இது குறித்து கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர் ஆர்.ரவிக்குமார் கூறியதாவது:

இச் சிலைகளை ஆய்வு செய்த போது இவை 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது. நந்தி சிலையின் கழுத்தில் உள்ள பட்டை, அதன் திமில் ஆகிய வற்றை பார்க்கும்போது, அவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக இருக்கலாம். முருகன் சிலை, அதன் வேலைப் பாடுகள் ஆகியவற்றை பார்க்கும் போது சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையாக இருக்க லாம் என்றார்.

தொல்லியல் துறை முன்னாள் ஆய்வாளர் ஆர்.ஜெகதீசன், வானவராயர் பவுண்டேஷன் ஒருங்கிணைப் பாளர் சு.சதாசிவம் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x