Published : 09 Dec 2014 09:46 AM
Last Updated : 09 Dec 2014 09:46 AM
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையோடு 2013-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்க முயற்சித்தோம். இதற்கு முதல் ஆதரவு தந்தவர் வைகோ.
துரதிஷ்டவசமாக இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வைகோ தொடர்ந்து குற்றம் காண்பதும், விமர்சனங்கள் வைப்பதும் பிரச்சினைக்கு உள்ளாகி தற்போது கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் அளவுக்கு வந்துள்ளதை வருத்தத்துக்கு உரியதாக கருதுகிறேன்.
பேசி முடித்திருக்க வேண்டிய விஷயங்களை, முறித்து முடிக்கும் அளவுக்கு மதிமுக வந்திருப்பது மகிழ்ச்சி தருவதாக இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT