Published : 02 Dec 2014 09:49 AM
Last Updated : 02 Dec 2014 09:49 AM

கேஸ் டேங்கர் லாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: சென்னையில் இன்று பேச்சுவார்த்தை

ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக தென் மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது. அதனால் தமிழகம் உள்பட ஐந்து மாநிலங் களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதனிடையே இப்போராட்டம் தொடர்பாக சென்னையில் இன்று எண்ணெய் நிறுவனத்தினருடன், காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் கள் பேச்சுவார்த்தை நடத்து கின்றனர்.

நாமக்கல்லை தலைமையிட மாகக் கொண்டு தென் மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. அந்த லாரிகள் 3 முக்கிய எண்ணெய் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப் படையில், காஸ் கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றன. குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான பாட்டலிங் பிளாண்டுகளுக்கு காஸ் கொண்டு செல்லும் பணியில் டேங்கர் லாரிகள் ஈடுபடுகின்றன.

இவற்றுக்கான ஒப்பந்த காலம் கடந்த அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதையடுத்து இ-டெண்டர் முறையில் புதிய ஒப்பந்தத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. புதிய ஒப்பந்தத்தில் லாரிகளுக்கான ஒப்பந்த காலம் ஐந்து ஆண்டுகள் எனவும், கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்கு பின் பதிவு செய்த டேங்கர் லாரிகள் மட்டும் ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. எண்ணெய் நிறுவனங்களின் நிபந் தனை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்த காலம் மீண்டும் மூன்றாண்டாக குறைக்கப்பட்டது.

அதையடுத்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சிறு சிறு பிழைகள் இருப்பதாகக் கூறி 38 காஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டும் எண்ணெய் நிறுவனத்தினர் வாடகை ஒப்பந்தம் வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் பி. நடராஜன் கூறியது:

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் இருந்து ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான பாட்டலிங் பிளாண்டுகளுக்கு காஸ் கொண்டு செல்லும் பணிக்கு 3,232 லாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 38 லாரி களுக்கு வாடகை ஒப்பந்தம் வழங்க வில்லை.ஒப்பந்தம் வழங்கப்படாத தால், நேற்று நள்ளிரவு முதல் தென்மண்டல அளவிலான காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லோடு செய்யப்பட்ட டேங்கர் லாரிகள் மட்டும் பாட்டலிங் பிளாண்டுகளில் அன்லோடு செய்யும். புதிதாக லோடு செய்யப் படமாட்டாது. வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தால் ஒரு வார காலத்துக்குள் காஸ் தட்டுப்பாடு ஏற்படும்.

வேலைநிறுத்தப் போராட்டத் தால் நாள் ஒன்றுக்கு மொத்தமாக ரூ. 2 கோடி வரை உரிமை யாளர்களுக்கு இழப்பு ஏற்படும். இப்போராட்டம் தொடர்பாக இன்று (2-ம் தேதி) சென்னை ஐஓசியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x