Published : 28 Dec 2014 10:36 AM
Last Updated : 28 Dec 2014 10:36 AM
சென்னையில் உள்ள 4 மாவட்டங்களின் செயலாளர் பதவியை பெற திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகளை இழுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் 2 மாவட்டங் களாக (தென்சென்னை, வட சென்னை) இருந்த திமுக அமைப்பு, இப்போது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட் டுள்ளன. பகுதிகளின் எண்ணிக் கையும் 23-ல் இருந்து 46 ஆக உயர்த்தப்பட்டன. இவற்றின் கீழ் 296 வார்டுகள் உள்ளன.
இதில் 150 வார்டுகளுக்கு தேர்தல் முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வார்டுகளில் பிரச்சினை நிலவுவதால், பேச்சுவார்த்தை அடிப்படையில் போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாவட்டச் செய லாளர் பதவியைப் பிடிக்க கட்சிக் குள் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்காக, பகுதித் தேர்தலில் தங்களது ஆதரவாளர்களை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சென்னை மேற்கில் ஜெ.அன்பழ கனுக்கும், கு.க.செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதில் அன்பழகனுக்கு கருணாநிதியின் ஆதரவு உள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய் யப்படுவார் எனத் தெரிகிறது. சென்னை கிழக்கில் ஸ்டாலினின் ஆதரவாளரான பி.கே.சேகர் பாபுவை வெற்றி பெற வைக்க முயற்சி நடக்கிறது. இந்த மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதனுக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பரிந்துரை செய்திருப்பதாக சொல்கின்றனர்.
வடக்கு மாவட்டத்துக்கு மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சாமி, ஆர்.டி.சேகர் ஆகிய 3 பேரிடையே போட்டி நிலவு கிறது. ஆர்.டி.சேகருக்கும், மாதவரம் சுதர்சனத்துக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளது. தெற்கு மாவட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியனும், கே.கே.நகர் தனசேகரனுக்கும் இடையே போட்டி நிலவினாலும் ஸ்டாலினுக்கு நெருக்கமான மா.சுப்பிரமணியனுக்கே வாய்ப்பு கிட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT