Published : 02 Dec 2014 12:58 PM
Last Updated : 02 Dec 2014 12:58 PM

மாற்றுத் திறனாளிகள் தினம்: முதல்வர் வாழ்த்து

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் 3-ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை இருமடங்காக உயர்வு; அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடகப் பயிற்சி (ஆரடவiஅநனயை கூசயiniபே) மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி ( என பல்வேறு நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்புத் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு; ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45-லிருந்து 18-ஆக குறைப்பு; இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ, மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான ஆயபnகைநைச கருவிகள்; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகளை மீண்டும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x