Published : 17 Dec 2014 10:07 AM
Last Updated : 17 Dec 2014 10:07 AM
தமிழ்நாடு இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருப் பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடக்கின்றன.இதற் காக, இந்து சமய அறநிலையத் துறை 40 ஆயிரம் புத்தகங் களை கோயில்களுக்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைணவ சமய கோயில்களில் திருப்பாவை யும், சைவ சமய கோயில்களில் திருவெம்பாவையும் பாடப் பட்டு வருகின்றன. இந்நிலை யில், திருப்பாவை மற்றும் திருவெம்பாவையை மாணவர் கள் மத்தியில் ஊக்குவிக்கும் விதத்தில், சென்றாண்டு மார்கழி மாதத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு அந்தந்த கோயில் களின் சார்பிலும், மாவட்ட அறநிலையத் துறை மூலம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மார்கழி மாதம் தொடங்கி யுள்ள நிலையில், இந்தாண்டும் மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த இரண்டு ஆன்மீக நூல்களிலி ருந்தும் கட்டுரை மற்றும் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப் படவுள்ளன. இந்த போட்டிகள், அறநிலையத்துறையின் அதிக வருவாய் ஈட்டுகிற கோயில்களில் முதற்கட்டமாக நடத்தப்படும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்படும். அதுமட்டு மன்றி, மாவட்ட அளவிலான போட்டிகளிலும் அவர்கள் போட்டியிடலாம். இதிலும் வெல் பவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த இறுதி போட்டி மார்கழி மாத இறுதியில் நடக்கவுள்ளது.
இந்த போட்டிகளில் பங் கேற்கவும், கோயில்களில் திருப் பாவை, திருவெம்பாவையை கொண்டாடவும் அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களுக்கு 40 ஆயிரம் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT