Published : 31 Dec 2014 10:33 AM
Last Updated : 31 Dec 2014 10:33 AM

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணி ஒதுக்கீட்டு ஆணை: டிஎன்பிஎஸ்சி தலைவர் வழங்கினார்

குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர் மற்றும் கணக்கர், கீழ்நிலை எழுத்தர் ஆகிய பதவிகளில் 2,760 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி குரூப்-2ஏ தேர்வு (நேர்முகத்தேர்வு இல்லாத பணிகள்) நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 4 லட்சத்து 21 ஆயிரத்து 489 பேர் எழுதினர்.

இந்த நிலையில், தேர்வெழுதி யவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியல் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக் கப்பட்டோர் பட்டியல் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவை தரவரிசை மற்றும் இடஒதுக்கீட்டின்படி டிசம்பர் 29 முதல் ஜனவரி 23-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 200 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களின் கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க் கப்பட்டன.

முதல் 10 இடங்களைப் பிடித்த தேர்வர்களுக்கு டிஎன் பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் பணி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

முதலிடத்தைப் பிடித்த சென்னை யைச் சேர்ந்த டி.ரங்கநாதன் வெங்கட்ராமன், 2-ம் இடம் பெற்ற மதுரை ஆர்.சிந்தியா ஆகியோர் பதிவுத்துறையில் உதவியாளர் பணியை தேர்வுசெய்தனர். இந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 23-ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்பும் மறுநாள் கலந்தாய்வும் நடத்தப் படும். தினமும் 200 பேர் கலந்துகொள்கிறார்கள். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து காலியிடங்கள் இருந்தால் அவை 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-2-ஏ தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள் பெயர் விவரம் வருமாறு: டி.ரங்கநாதன், வெங்கட்ராமன், ஆர்.சிந்தியா, என்.ஆர்.ஜெ.தினேஷ்குமார், ஜி.மகேஸ்வரி, ஜெ.முகமது மீராசாகீப், எம்.மைமூன்கனி, எப்.ஜெ.அஸ்வினி, எஸ்.ராஜ்குமார்

ஏ.சயது அசார் ரஃபாத், எஸ்.ரம்யா இவர்களில் 4-ம் இடம் பெற்ற மகேஸ்வரியை தவிர மற்ற 9 பேரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஸ்வரி பிஎஸ்சி பட்டதாரி ஆவார். கடந்த சில ஆண்டுகளாகவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு அரசு வேலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x