Published : 29 Dec 2014 09:32 AM
Last Updated : 29 Dec 2014 09:32 AM

ஜவ்வாது மலையில் துப்பாக்கி கலாச்சாரம்: ஆயுள் கைதி கொலையில் துப்பு கிடைக்காமல் திணறல்

ஜவ்வாது மலையில் ஆயுள் தண்ட னைக் கைதி சுட்டுக் கொல்லப் பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. விலங்கு களை வேட்டையாடியவர்கள் மனிதர்களையும் வேட்டையாட துணிந்துள்ள அளவுக்கு துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 272 கிரா மங்கள் உள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கிராமங்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காட்டு விலங்கு களை வேட்டையாடவும், அவற்றி டம் இருந்து விளை நிலங்களை பாதுகாக்கவும் நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தும் முறையை மலை வாழ் மக்கள் கடைபிடிக்கின்றனர்.

ஒற்றைக்குழல் துப்பாக்கி (SBML) அதிக அளவில் பயன்படுத் தப்படுகிறது. துப்பாக்கி சுடு வதற்கு பயன்படுத்தப்படும் டிரிகர் என்ற கருவியை, வெளியில் வாங்கி வருகின்றனர். பின்னர், அதைக்கொண்டு துப்பாக்கியை வடிவமைக்கின்றனர். துப்பாக்கி யில் ஒரு முறை மருந்து திணிப்ப தற்கு 15 நிமிடத்துக்கும் கூடுத லாக நேரத்தை செலவிட வேண்டும். குறைந்தபட்சம் 50 அடி தொலைவில் இருந்து சுடும்போது வேகம் கிடைக்கும். அந்த வகையில்தான் ஜாமீனில் வந்த ஆயுள் தண்டனைக் கைதி ஜெயபாலை கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.

இங்கு துப்பாக்கி தயாரிப்பது குடிசைத் தொழிலாகவே உள்ளது. 3 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனையும் செய்யப்படுகிறது. துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் தங்கு தடையின்றி துப்பாக்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவற்றை எளிதாக பறிமுதல் செய்துவிட முடியாது என்று கூறும் அவர்கள், “காட்டுப் பகுதியில் மறைவான இடத்தில் துப்பாக்கியை வைத்திருப்பார்கள்” என்கின்றனர்.

காட்டு விலங்குகளை வேட்டை யாட துப்பாக்கியை பயன்படுத்தி யவர்கள், இப்போது மனித இனத் தையும் வேட்டையாடத் தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களுக்கும் நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது.

விரைவில் ரெய்டு

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஜவ்வாது மலையில் துப்பாக்கி தயாரிப்பது இல்லை. அவர்கள் வெளியில் இருந்து வாங்கி வருகின் றனர். குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு நிகழும் சம்பவங்களால் சிலர் உயிரிழந் துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு சுமார் 300 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுள் தண்டனை கைதி சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இதையடுத்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

தனிப்படைகள்

ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள தம்புகொட்டான்பாறை கிராமத்தில் வசித்த ஆயுள் தண்டனை கைதி ஜெயபால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. 18 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிப்பதற்காக வேலூர் சரக காவல் துணை தலைவர் தமிழ்ச்சந்திரன் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேசன், சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டு விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x