Published : 23 Dec 2014 08:52 AM
Last Updated : 23 Dec 2014 08:52 AM

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் அரசு அலுவல கங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற் றக்கோரிய மனு மீதான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், காந்தி, நேரு மற்றும் திருவள் ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் ஆகி யோரது படங்களை வைக்கலாம் என அரசாணை உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 27.9.2014 அன்று தண்டனை வழங்கியதை அடுத்து அவர் முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி யேற்றார். இருப்பினும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அவரது படம் இன்னும் வைக்கப்பட வில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்னும் அகற்றப்படவில்லை. அரசு அலுவலகங்கள், அரசின் திட்டங்களில் உள்ள ஜெய லலிதாவின் பெயர் மற்றும் அவரது படங்களை அகற்றவும், ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை வைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, அரசு அலுவல கங்களில் முன்னாள் முதல்வர் படங்கள் வைக்கலாம் என அரசாணை உள்ளது. இவ் விவகாரம் அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது. அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்றார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும் போது, முன்னாள் முதல்வர்கள் அனைவரின் படத்தையும் வைக்க வில்லை.

ஜெயலலிதா படத்தை அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிய ஒன்றிரண்டு நாள்களே உள்ளன.

ஆனால், இதுவரை ஜெயலலிதா படத்தை அகற்றவில்லை என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x