Published : 23 Dec 2014 08:39 AM
Last Updated : 23 Dec 2014 08:39 AM
கிரானைட் குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவை அதிகாரிகள் சரியாக கணக்கிட்டுள்ளனரா என்பதை அறிய தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்ட கற்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை பெற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் திட்டமிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் விசாரித்து வருகிறார். இதுதொடர்பாக, மதுரை யில் பொது மக்களிடம் 4 நாட்களுக்கு அவர் மனுக்களை பெற்றார். குவாரிகளில் 2 நாள்கள் நேரடியாக ஆய்வு நடத்தினார். குவாரிகளில் நீர்நிலைகள் அழிப்பு, விவசாயம் பாதிப்பு, புராதனச் சின்னங்கள் சிதைக்கப்பட்டது குறித்த ஆதாரங்களை திரட்டுவதில் சகாயம் ஆர்வம் காட்டி வருகிறார். விதிகளை மீறி கிரானைட் வெட்டி எடுத்தவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது, காவல்துறை மூலம் குற்ற வழக்கு பதிவு செய்தது என 2 வழிகளில் மட்டுமே அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இது தவிர்த்து, இந்த முறைகேட்டால் ஏற்பட்ட பாதிப்பு கள், முறைகேடு நடக்க உடந்தை யாக இருந்தவர்கள் குறித்த ஆதா ரங்களையும் திரட்டி வருகிறார்.
மேலும் அரசு தரப்பில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள், மோசடி யாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் சரியாகக் கணக் கிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க கனிம வளத்துறையிட மிருந்து சகாயம் ஆவணங்களை பெற்றுள்ளார். குவாரியில் அனு மதிக்கப்பட்ட அளவு, எடுக்கப்பட்ட கற்கள் குறித்து ஏற்கெனவே அள வீடு செய்யப்பட்டுள்ளது. டாமின் நிறுவனம் வழங்கிய அனு மதிச் சீட்டு, தூத்துக்குடி உள் ளிட்ட துறைமுகங்களில் ஏற்று மதி செய்யப்பட்ட விவரம், வெளி மாநிலங்கள் உட்பட உள்நாட் டில் விற்பனை செய்த விவரங் களை பெற்று ஒப்பிடவும் ஆய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
வெட்டப்பட்ட கிரானைட் கற்களில் 60 சதவீதத்துக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தகவல் உள்ளது. குவாரிகளில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை பெற்று, இதன் மூலம் எவ்வளவு கற்களை அறுக்கவும், பாலீஷ் செய்திருக்கவும் முடியும் என்பது உட்பட பல்வேறு வழி களிலும் தொழில்நுட்ப ரீதியில் மோசடியை அளவிட சகாயம் திட்டமிட்டுள்ளார்.
டிசம்பர் 29-ம் தேதி முதல் மீண்டும் மதுரையில் விசார ணையைத் தொடங்க சகாயம் திட்டமிட்டுள்ளார். அப்போது குவாரி மோசடியில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT