Published : 04 Apr 2014 12:54 PM
Last Updated : 04 Apr 2014 12:54 PM
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை குறிப்பிட்ட விமானங்களின் பயணம் செய்ய கட்டணம் ரூ.1,599 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை -மும்பை மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண்கள் AI-569/343), சென்னை-திருவனந்தபுரம் மார்க்கத்தில் செல்லும் விமானம் ( AI-967), சென்னை-கோவா மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-975), சென்னை-கொச்சி மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-509), சென்னை- ஐதராபாத் மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-545/981), சென்னை-ஆமதாபாத் மார்க்கத்தில் செல்லும் விமானம் (எண் AI-981), சென்னை-டெல்லி மார்க் கத்தில் செல்லும் விமானம் (எண் AI-440/430) உட்பட 40 மார்க்கங்களில் செல்லும் 108 விமானங்களுக்கு இச்சலுகை கிடைக் கும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT