Published : 09 Apr 2014 12:16 PM
Last Updated : 09 Apr 2014 12:16 PM

மே 1-ல் 3,850 திரையரங்குகளில் ‘கோச்சடையான் ரிலீஸ்

ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக் கும் ‘கோச்சடையான்’ மே 1-ல் உலகெங்கிலும் ஒரே சமயத்தில் 3850 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரஜினிகாந்த் நடித்து, அவ ருடைய மகள் சவுந்தர்யா இயக்கி யுள்ள ‘கோச்சடையான்’ படத் திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை யமைத்துள்ளார். கதாநாயகியாக இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.நவீனதொழில் நுட்பத்தில் ஏராளமான பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படம் வெளியாகும் நாள் தள்ளிக் கொண்டே சென்றது.

தற்போது ‘கோச்சடையான்’ மே 1-ல் உலகம் முழுவதும், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, குஜ ராத்தி, பஞ்சாபி, ஒரியா, ஜப் பானிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x