Published : 27 Dec 2014 09:47 AM
Last Updated : 27 Dec 2014 09:47 AM
இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத் தேவையான தகவல்கள் தொகுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்காக இணையதளங்களை நாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள் தமிழில் கிடைப் பதில்லை. மேலும், பாடத்திட்டத் துக்கு தேவையான தகவல்கள் அனைத் தையும் அவை உள்ளடக்கியிருப்ப தில்லை.
இந்த நிலையை உணர்ந்த பள்ளி கல்வித்துறை பள்ளி மாணவர் களுக்கான இணைய அறிவுக் களஞ் சியத்தைக் கட்டமைத்து வருகிறது. உதாரணமாக, அறிவியலில் புவியீர்ப்பு விசை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால், புவியீர்ப்பு விசை என்று பதிவிட்டால், அது குறித்த கட்டுரைகள், வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் என எல்லா தகவல்களையும் இந்த இணையத்தில் பெறலாம். இதன் மூலம் ஒரு மாணவர் ஒரு விஷயத்தை முழுமையாகவும் எளிதிலும் புரிந்துகொள்ள முடியும்.
இது குறித்து இத்திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவ ரான அசிர் ஜூலியஸ் கூறும்போது, “இந்த தகவல் களஞ் சியத்துக்கு தேவையான தகவல்களை திரட்டி பதிவிட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இந்த பணியில் ஈடுபடுவது அவர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணையத்தில் ஒரு தகவலைப் பதிவிடும்போது அது யாரால் பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படும். இது ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்” என்றார்.
முதல் கட்டமாக அறிவியல் சம்பந் தப்பட்ட வீடியோக்களை திரட்டும் பணி நடைபெற்று வருகிறது. 32 மாவட்டங்களிலிருந்தும் ஒரு மாவட் டத்துக்கு 3 அறிவியல் வீடியோக்கள் தயார் செய்து தர கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது. தகவல்களை திரட்டித் தரும் குழுவில் இருக்கும் ஆசிரியர் என்.அன்பழகன் கூறும்போது, “என் வகுப்பில் பாடம் நடத்தும்போதே அதை செயல்வடிவில் மாணவர்களை செய்யச் சொல்லி அதை வீடியோ எடுக்கிறேன். இதனால், மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள்” என்றார்.
ஏற்கெனவே தேசிய அளவில் மத்திய அரசு >www.nroer.gov.in என்ற தகவல் களஞ்சியத்தை ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் பள்ளி கல்வித்துறை மூலம் ஒரு தகவல் களஞ்சியம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து மேம்படுத்த அவ்வப் போது நடக்கும் அறிவியல் நிகழ்வுகள், முன்னேற் றங்கள், புதிய பாடங்கள் சேர்க்கப்படும். இதனை இணைய வசதி கொண்ட எந்த மாணவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT