Published : 24 Dec 2014 10:35 AM
Last Updated : 24 Dec 2014 10:35 AM
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேரை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: சென்னை சட்டம்-ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையராக இருந்த சி.ஸ்ரீதர் சென்னை சட்டம்-ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து (தெற்கு) இணை ஆணையராக இருந்த ஆர்.தினகரன் சென்னை சட்டம்-ஒழுங்கு (வடக்கு) இணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை போக்குவரத்து (வடக்கு) இணை ஆணையராக இருந்த ஏ.அருண் சென்னை சட்டம்-ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராகவும், தலைமையிடத்து டிஐஜியாக இருந்த பி.நாகராஜன் சென்னை போக்குவரத்து (தெற்கு) இணை ஆணையராகவும், சிபிசிஐடி டிஐஜியாக இருந்த எம்.டி.கணேசமூர்த்தி சென்னை போக்குவரத்து (வடக்கு) இணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த பி.பகலவன் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும், பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பி.சரவணன் தி.நகர் துணை ஆணையராகவும், சென்னை விஐபி பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த அவினாஸ்குமார் பரங்கிமலை துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சரவணன் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஜெயசந்திரன் திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், திருச்சி ரயில்வே எஸ்.பி.யாக இருந்த சாம்சன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யாகவும், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஆனிவிஜயா திருச்சி ரயில்வே எஸ்.பி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இருந்த ராமர் சென்னை விஐபி பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பெட்டாலியன் துணை கமாண்டன்ட் ஆக இருந்த ஜெயவேல் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9-வது பெட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆகவும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9-வது பெட்டாலியன் காமாண்டன்ட் ஆக இருந்த உமயாள் மதுரை மாநகர துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி.யாக இருந்த சண்முகப்பிரியா லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9-வது பெட்டாலியன் கமாண்டன்ட் ஆக இருந்த ஈஸ்வரன் கோவை மாநகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT