Published : 27 Dec 2014 11:22 AM
Last Updated : 27 Dec 2014 11:22 AM

29-ல் சுற்றுலா தொழில் பொருட்காட்சி தொடக்கம்: கிராமியக் கலை நிகழ்ச்சி, விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம்

41-வது சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியை வரும் 29-ம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பொருட்காட்சியின் சிறப் பம்சமாக இந்த ஆண்டு இமய மலையிலுள்ள அமர்நாத் குகை மற்றும் பனி லிங்கம் போன்று தத்ரூபக் காட்சி அமைக்கப்படவுள்ளது.

தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டு அல்லது மூன்றா வது வாரத்தில் சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி தொடங் கப்படும். சென்னை தீவுத்திடலில் 70 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியை, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை ஸ்பெல் பவுண்ட் என்ற தனியார் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்த முறை சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியை 29-ம் தேதி தொடங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதில் 120 சிறிய கடைகள், 50 பெரிய கடைகள், மேஜிக் அரங்குகள், பறவைகள் கண்காட்சி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு களில் 30 வகைகள் ஒருபுறத் திலும், மற்றொரு புறத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்ந்த 50 கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.

இதுதவிர, பொழுதுபோக்கு மேடை நிகழ்ச்சிகள், பொருட் காட்சியின் 70 நாட்களிலும் நடைபெறவுள்ளன. இம்முறை கிராமியக் கலைகள், கிராமிய விளையாட்டுகள் சார்ந்த நிகழ்ச்சி களுக்கு அதிகமாக ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த தொழிற் பொருட் காட்சியின் சிறப்பம்சமாக, இமய மலையிலுள்ள அமர் நாத் குகை மற்றும் பனிலிங்க வடிவிலான அரங்கு, பிரம் மாண்ட வடிவில் தத்ரூப மாக பார்வையாளர்களின் காட் சிக்கு வைக்கப்பட உள்ளன.

15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பொருட் காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முதல் இரு தினங்களுக்கு கட்டணமின்றி பார்வையாளர்களை அனுமதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x