Published : 18 Dec 2014 09:40 AM
Last Updated : 18 Dec 2014 09:40 AM
மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சீனியர்களுக்கு தேர்தலில் சீட் இல்லை என்று திமுக தலைமை கூறியதையடுத்து பலர் அதிருப்தியில் உள்ளனர். இதை சமாளிக்கும் வகையில் சீனியர்களுக்கு தலைமைக்கழக பொறுப்புக்களை வழங்க கருணா நிதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவின் 14-வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. ஊராட்சி, நகரம், பேரூராட்சி வார்டுகள், ஒன்றியங்கள், நகரங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மாநகராட்சி வார்டு களுக்கான தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கிறது. 36 மாவட்டங்களாக இருந்த திமுக அமைப்பு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 65 மாவட்டங் களாக அதிகரிக் கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு புதியவர் களையே மாவட்டச் செயலாளர் களாக நியமிக்கப்போவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதற்கிடையே, பலமுறை மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சித் தேர்தலில் புது நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்றால், தேர்தல் நேரத்தில் தங்களுக்கோ தங்கள் குடும்பத் தாருக்கோ சீட் கேட்கக் கூடாது என்று உறுதிமொழி பத்திரத்தில் கருணாநிதி கையெழுத்து வாங்கி யுள்ளார். இந்த உறுதிமொழி பத்திரத்தில் 18 சீனியர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக வட் டாரங்கள் கூறியதாவது:
ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்துவதாக கூறிவிட்டு நிபந் தனைகள் விதிப்பது நியாய மில்லை. ஒரு சிலருக்கு எந்த நிபந்தனையும் விதிக்காத நிலையில், பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கு வது நியாயமில்லாதது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியாக பேசி வருகின்றனர். உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகளிடம் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி வருவதும் கட்சியில் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த அதிருப்தியை சமாளிக்க, சிலருக்கு கட்சித் தலைமை நிலைய பொறுப்புகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தலில் சீட் இல்லை என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. இதனால், ஆற்காடு வீராசாமி வகித்து வரும் முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு கே.என்.நேருவை கொண்டுவர பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமன்றி திமுகவின் 5 துணை பொதுச்செயலாளர் பதவிகளில் ஒன்று தலித்துக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்தப் பதவியில் வி.பி.துரை சாமிக்கு பதிலாக ஆ.ராசாவை நியமிக்க வாய்ப்புள்ளது. இதேபோல், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கவும், ஆ.ராசா வகித்த கொள்கைபரப்புச் செயலாளர் பதவிக்கு எ.வ.வேலுவை நியமிக்க வும் கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. இவ்வாறு திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT