Published : 01 Apr 2014 10:01 AM
Last Updated : 01 Apr 2014 10:01 AM
பிளஸ்-2 முக்கிய பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தொடங்குகிறது. முதல்முறையாக தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் அனைத்து மையங்களிலும் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
பிளஸ்-2 தேர்வு மதிப்பீடு கடந்த 21-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 66 மையங்களில் நடைபெறும் மதிப்பீட்டு பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள்
இதுவரை தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏதேனும் 2 மையங்களில்தான் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக எப்படி மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்கள் அனைத்து மையங்களிலும் மதிப்பீடு செய்யப்படுகிறதோ அதேபோல், தொழில்கல்வி பாட விடைத்தாள்களும் அனைத்து மையங்களிலும் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT