Published : 30 Dec 2014 10:31 AM
Last Updated : 30 Dec 2014 10:31 AM
நடப்பு நிதியாண்டில் பாலிசிகளுக் கான பிரீமியம் வசூலிப்பதில், தென்னிந்தியாவில் உள்ள 13 மண்டலங்களில் எல்ஐசி-யின் சென்னை மண்டலம் ரூ.217 கோடி வசூலித்து முதலிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து, எல்ஐசி தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
எல்ஐசி நிறுவனத்தின் தென் மண்டலத்தில், 13 மண்டலங்கள், 261 கிளைகள், 260 சேட்டிலைட் கிளைகள், 198 சிறிய அலுவலகங்கள், 4,508 பிரீமியம் பாயின்ட்கள் உள்ளன. இதன் மூலம் 3.4 கோடி பாலிசிதாரர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில் (2014-15) கடந்த டிச.15-ம் தேதி வரை, எல்ஐசி-யின் தென் மண்டல அலுவலகங்கள் மூலம் 12.19 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட் டுள்ளன. இதன் மூலம் ரூ.1,911 கோடி பிரீமியம் வசூல் ஆகியுள் ளது. இதன் மூலம், அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம். மண்டல அலுவலகங்கள் அளவில், கேரள மாநிலம் கோழிக்கோடு மண்டலம், பாலிசி கள் (1.42 லட்சம்) விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் பிரீமியத் தொகை (ரூ.217 கோடி) வசூலிப் பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை கிளையைச் சேர்ந்த ஏஜென்ட் டி.எஸ்.வெங்கடேசன், வேலூர் கிளையைச் சேர்ந்த ஆர்.பரத் குமார் ஆகிய இருவரும் தலா 869 பாலிசிகளை விற்பனை செய்து, ஏஜென்ட்கள் மத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
மேலும், நடப்பு நிதியாண்டில் 9.82 லட்சம் பாலிசிதாரர்களின் வாழ்நாள் கால பயன்களாக ரூ.1,636 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 4.6 லட்சம் முதிர் வடைந்த பாலிசிகள் மூலம் ரூ.2,937 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இறந்தவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையாக 46,097 பாலிசிதாரர்களுக்கு ரூ.452 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.30-ம் தேதி வரை 11.32 லட்சம் காலாவதியான பாலிசிகள் புதுப்பிக்கப் பட்டுள்ளன. எல்ஐசி தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோ காப்பீட்டுத் திட்டமான பாக்ய லட்சுமி காப்பீட்டுத் திட்டத்தில், டிசம்பர் மாத இறுதிக்குள் 1.3 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டி.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT