Published : 30 Dec 2014 09:50 AM
Last Updated : 30 Dec 2014 09:50 AM

கடலில் மூழ்கி 5 பெண்கள் பலி: ராமநாதபுரம் அருகே பரிதாபம்

ராமநாதபுரம் அருகே நரிப்பையூர் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பெண்கள் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தை களும் அருகில் உள்ள தெற்கு நரிப்பையூர் காட்டுப் பள்ளி வாச லுக்கு நேர்த்திக்கடன் செலுத்த நேற்று காலை சென்றனர்.

மதிய உணவை பள்ளிவாசல் வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு பின்னர் குழந்தைகளைத் தவிர்த்து பெண்கள் மட்டும் அங்குள்ள கடற்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென வந்த பெரிய அலையில், குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் சிக்கினர். இதை கரையில் இருந்து பார்த்த குழந்தைகள் செய்வதறியாது அலறி சத்தம் போட்டனர். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அருகிலிருந்த மீனவர்கள், அலையில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இதில் நரிப்பையூர் சீனி ஆவுல் மனைவி செய்யது காதர்பீவி (40), மகள் அராபத் (20), முகம்மது ரபிக் மனைவி சீனி பசரியா (39), மகள் இஸ்மத் (18), முஸ்தாக் மனைவி ரமீலா (23) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இறந்த செய்யது காதர் பீவியும், சீனி பசரியாவும் உடன் பிறந்த சகோதரிகள்.

இதுபற்றி தகவல் அறிந்த சாயல்குடி காவல்துறையினர், கடலில் உயிரிழந்த 5 பேரின் சடலங்களை கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடல் அலையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் இறந்த சம்பவம் நரிப்பையூர் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இதே கடற்கரையில் 6 மாதங்களுக்கு முன்னர் இருவர் கடல் அலையில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x