Published : 28 Dec 2014 12:55 PM
Last Updated : 28 Dec 2014 12:55 PM
திரிசூலத்தில் கல்குவாரி குட்டை யில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் எபநேசர்(15). நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ஸ்ரீநாத்(15). எபநேசரும் ஸ்ரீநாத்தும் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய எபநேசர், தனது நண்பன் ஸ்ரீநாத்துக்கு கேக் கொடுக்க நங்கநல்லூரில் உள்ள அவனது வீட்டுக்கு சென்றான். பின்னர் இருவரும் சைக்கிளில் புறப்பட்டு வெளியில் சென்றனர். அவர்கள் இருவரும் நீண்டநேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். பின்னர் மடிப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர்.
26-ம் தேதி காலை வரை இருவரும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து எபநேசரின் செல்போன் எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திரிசூலம் பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்த இடத்துக்கு சென்ற போலீஸார், திரிசூலம் கல்குவாரி குட்டையின் அருகில் செல்போன் மற்றும் மாணவர்களின் உடைகளைக் கண்டுபிடித்தனர். இரண்டு மாண வர்களும் குட்டையில் மூழ்கி இறந் திருக்கலாம் என்ற சந்தேகித்த போலீஸார், தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். அவர் கள் நீண்ட நேரம் தேடியும் மாண வர்களின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அவர்களின் உடல்கள் குட்டையில் மிதந்தது. தீயணைப்பு படையினர் அந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை களின் உடலை பார்த்து பெற்றோர் கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
குழந்தை பலி
பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மூன்றரை வயது மகன் ஹரிஷ். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஹரிஷ், வீட்டின் மாடியில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விளையாடிய பந்து மாடியில் திறந்து வைக்கப் பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதை எடுக்க முயற்சி செய்த ஹரிஷ் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து, நீரில் மூழ்கி இறந்தான். ஹரிஷை காணாமல் தேடிய பெற்றோர், நீண்ட நேரம் கழித்து அவன் தண்ணீர் தொட்டிக்குள் இறந்து கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT