Published : 09 Dec 2014 10:03 AM
Last Updated : 09 Dec 2014 10:03 AM
போக்குவரத்து ஊழியர்கள் தொழிற் சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல் தமிழக அரசு இடைக்கால நிவார ணம் அறிவித்துள்ளதற்கு தொமுச கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தொமுச பொது செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர் பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை. பேச்சு வார்த்தையை துவங்கக் கோரி அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து பல்வேறு போராட்டங் கள், மண்டல மாநாடுகள் நடத்தி இறுதியாக திருச்சியில் நடந்த மாநாட்டில் வரும் 19-ம் தேதியோ அல்லது அதன்பிறகோ வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிற்சங்கங் கங்களை அழைத்து பேசி முடிவு காணாமல், தொழிற்சங்கங்களி டையே பேசுவதற்கு வழக்கு ஒரு தடையாக உள்ளதென ஒரு காரணத்தைக் கூறி தொழிற்சங்க விரோதப் போக்கைக் கடைப்பிடித்து அரசு தன்னிச்சையாக இடைக் கால நிவாரணம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது
கண்டனத்திற்குரியது. அனைத்து தொழிற்சங்கத் தலைவர் களுடன் கலந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT