Published : 12 Dec 2014 11:55 AM
Last Updated : 12 Dec 2014 11:55 AM
எண்ணூர் காமராஜர் துறைமுகத் தில் 100 ஏக்கர் பரப்பளவில், வர்த் தகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு மண்டலம் அமைக்கப்பட உள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகம், 2001-ம் ஆண்டு சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,056 கோடி செலவில் தொடங்கப்பட்டது. மேலும், 2004-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன் 3 முனையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, இத்துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் முனையங்கள் 6 உள்ளன. இவற்றில் 5 முனை யங்கள் மட்டும் தற்போது செயல் பாட்டில் உள்ளன.
இத்துறைமுகம் தமிழ்நாட்டில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியைக் கையாளுகிறது. தற்போது 3 முனையங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி நடக்கிறது. இதில், 2 முனையங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதில், மின்சார வாரியமே நேரடியாக இறக்குமதி பணிகளை கையாளுகிறது. மேலும், நிலக்கரியை கையாளுவ தற்காக மூன்றாவது முனையம் செட்டிநாடு இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு 30 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
இத்துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை கையாளுவதற்காக, 100 ஏக்கர் பரப்பளவில் வர்த்தகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு (Free Trade and Warehousing Zone-FTWZ) அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, எண்ணூர் காமராஜர் துறைமுக அதிகாரி ஒருவர் தி இந்து’விடம் கூறியதாவது:
காமராஜர் துறைமுகத்தில் தினந்தோறும் பல லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. இந்த சரக்குகளை வைப்பதற்கு போதிய கிடங்கு வசதி இல்லை. மேலும், ஏற்றுமதி செய்வதற்காக தொழிற்சாலைகளில் இருந்து வரும் சரக்குகளை கப்பலில் ஏற்றுவதற்கு சில நேரங்களில் காலதாமதம் ஆகிறது. அத்தகைய சமயங்களில் அவற்றை ஏற்றி வரும் லாரிகள் துறை முகத்துக்கு வெளியே நிறுத்தப் படுகின்றன. இதனால், இட நெருக்கடி ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சினைகளை சமாளிப் பதற்காக, வர்த்தகம் மற்றும் சேமிப்புக் கிடங்கு மண்டலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், துறைமுகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக 650 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 100 ஏக்கர் பரப்பளவில் இந்த சேமிப்புக் கிடங்கு மண்டலம் அமைக்கப்படும்.
நிறுவனம் அளிக்கும் அறிக்கை யின் அடிப்படையில், அடுத்த கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம், கிழக்கு கடற்கரை மண் டலத்தில் இத்தகைய சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும் முதல் துறைமுகம் என்ற பெருமையை காமராஜர் துறைமுகம் பெறும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT