Published : 27 Dec 2014 11:03 AM
Last Updated : 27 Dec 2014 11:03 AM
பாக்ஸ்கான் தொழிற்சாலை மூடல் தொடர்பான 5-ம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தொழிற் சாலை திறக்கக் கோரி வாரம் ஒரு போராட்டமும் டிச. 29-ம் தேதி ஆலை நுழையும் போராட்டமும் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த பாக்ஸ்கான் தொழிற்சாலை திடீரென மூடப்போவதாக அறிவிக்கப்பட்டது. செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில், நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால் போதிய ஆர்டர்கள் இல்லை எனக்கூறி டிச.24 முதல் இந்த ஆலை முடல் நடைமுறைக்கு வந்தது. இதனால் ஆலையில் பணிபுரிந்த 1,200 தொழிலாளர்கள் ஒரே நாளில் வேலையிழந்தனர்.
ஆலையை மூடக்கூடாது, மீண்டும் திறக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தின. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் 4 கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை யும் நடத்தப்பட்டன. ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை மூடும் முடிவில் உறுதி யாக இருந்ததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந் தது.
இந்நிலையில், 5-ம் கட்டப்பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இருப்பினும் ஆலை நிர்வாகத்தின் முடிவில் எந்த மாற்றமும் இல்லாததால் இந்த பேச்சும் தோல்வியில் முடிந்தது. தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கோரி வரும் 29-ம் தேதி ஆலை நுழையும் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ளன.
இதுகுறித்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் கூறியதாவது: தொழிற்சாலை நிர்வாகம் ஆலையை திறக்க முடியாது என பிடிவாதமாக உள்ளது. தொழிற்சாலை சட்டங் களை மீறி தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை. அதனால், தொழிற்சாலையை திறக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உள் ளது. இதனால், ஆலையை திறக்கக்கோரி வரும் 29-ல் வலுகட்டாயமாக தொழிற் சாலைக்குள் நுழையும் போராட் டம் நடத்துவதென தொழிற் சங்கங்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நோக்கியா, பிஒய்டி, பாக்ஸ்கான் ஆகிய தொழிற்சாலைகள், தொழிற்சாலை சட்டங்களை மீறி செயல்படுவதால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 25 வயதில் வலுகட்டாயமாக பணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் மற்ற பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை சட்டங்களை மீறும் தொழிற்சாலைகளின் நிர்வாகங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண் டும். இதுபற்றியும் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள் ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT