Published : 08 Dec 2014 10:14 AM
Last Updated : 08 Dec 2014 10:14 AM

கர்நாடக அரசைக் கண்டித்து நாடாளுமன்றம் முன்பு டிச.15 முதல் உண்ணாவிரதம்: டெல்டா விவசாயிகள் முடிவு

காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டிச.15 முதல் கூட்டத் தொடர் முடியும் வரையில் நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருக்க விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

அனைத்து விவசாய சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முழு அளவில் நடைபெறவில்லை. குறுவை சாகுபடியும் பொய்த்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, மிகையாக வரும் உபரி நீரைக் கொண்டே பாசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விவசாயத்துக்கு மட்டு மல்லாது, குடிநீருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு உள்ளிட்ட இடங்களில் புதிய அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளுடன் அரசியல் கட்சியினரும் இணைந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், கர்நாடக அரசு அணை கட்டப்படுவது உறுதி என்ற ரீதியிலேயே செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழக பாஜகவும் மவுனம் சாதிக் கிறது.

எனவே, கர்நாடகத்தைக் கண்டித்து இம்மாதம் 15-ம் தேதி முதல் புதுடெல்லியில் நாடாளு மன்றம் முன்பு கூட்டத் தொடர் முடியும் வரையில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுத்துள்ளது.

இந்தக்கூட்டத்தில் குழு நிர்வாகிகள் நெல் ஜெயராமன், மன்னார் குடி குணசேகரன், நீடாமங்கலம் ஜெயக்குமார், கோட்டூர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x