Published : 30 Dec 2014 09:05 AM
Last Updated : 30 Dec 2014 09:05 AM

கோட்சேவுக்கு சிலை வைப்பது மகாத்மா காந்தி கொலையை நியாயப்படுத்துவது போலாகும்: பாஜக மீது தா.பாண்டியன் குற்றச்சாட்டு

கோட்சேவுக்கு சிலை வைப்பது என்பது கொலை செய்யத் தூண்டுவதற்கான அடையாளமாகவே இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அனைத்து கட்சிகளாலும் பொதுவான தலைவர் என ஏற்றுக் கொள்ளப்பட்ட காந்தியை பிரார்த் தனை கூட்டத்தின்போது சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பது என்பது காந்தி படு கொலையை நியாயப்படுத்துவது போன்றதாகும். மேலும், பிறரைக் கொலை செய்யத் தூண்டுவதற் கான அடையாளமாகவே இது உள்ளது. எனவே, இதை தடுத்து நிறுத்த அனைத்து வகையான அற வழிப் போராட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும். ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராடும்.

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான், சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இடையூறு, தாக்குதல்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா மீதான பாகிஸ்தான், இலங்கையின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 மாதங் களில் 82 முறை இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பாகிஸ்தானின் தாக்குதல் அதிகரித் துள்ளது. நரேந்திர மோடி ஆட்சி யில் உணவுப் பொருட்களின் விலை யேற்றம் 38% அதிகரித்துள்ளது.

பல ஆண்டுகளாக நிறைவேற்றப் பட்ட வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான பல உரிமை சட்டங்கள் சில திருத் தங்கள் மூலம் கைவிடப்பட உள்ளன.

இதில், 1000 தொழிலாளர் களுக்கு மேல் உள்ள தொழிற் சாலைகளில் 300 பேர் வரை ஆட் குறைப்பு செய்ய முன் அனுமதி பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைதான் உற்பத்தி மற்றும் ஏற்று மதியில் முதலிடம் பெற்றுள்ளது. இதில்தான் இந்தியர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை பலவீனப்படுத்தி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை பலப் படுத்துவது என்பது இந்தியாவை பலப்படுத்த உதவாது.

போக்குவரத்து துறையானது மக்களுக்கான சேவை துறையாக இருப்பதால் தமிழக அரசானது தொழிற்சங்கங்களை அழைத்து முன் நிபந்தனையின்றி, பேச்சு வார்த்தை மூலம் உடனே வேலை நிறுத்தத்துக்கு தீர்வு காண வேண்டும். மாறாக, சட்டம் - ஒழுங்கு எனும் பெயரில் காவல் துறையைப் பயன்படுத்தி வலுக் கட்டாயமாக வேலை நிறுத்த போராட்டத்தை குலைப்பதற்கான தவறான நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பிப். 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கோவை யிலும், அகில இந்திய மாநாடு மார்ச் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை புதுச்சேரியிலும் நடைபெற உள்ளன. ஆந்திர அரசு பாலாற்றிலும், கேரள அரசு முல்லைப் பெரியாறிலும், கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x