Published : 30 Dec 2014 03:03 PM
Last Updated : 30 Dec 2014 03:03 PM
போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.பிரபாகர ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப மேற்பார் வையாளர்கள், ஊழியர்கள் ஆகி யோருக்கு தற்போது வழங்கப் பட்டு வரும் 100 சதவீத அகவிலைப்படியை, 107 சதவீதமாக (7 சதவீதம் அதிகரிப்பு) உயர்த்தி வழங்க அரசு அனுமதித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்படும். அக விலைப்படி உயர்வால் ஏற்படும் செலவை அரசு போக்குவரத்துக் கழகங்களே ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர் வால் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 1.22 லட்சம் பேர் பயன்பெறுவர். அவர்களுக்கு ஊதிய விகிதப்படி குறைந் தபட்சம் ரூ.500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.3,500 வரை கூடுதலாக கிடைக்கும்.
புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT