Published : 01 Dec 2014 09:47 AM
Last Updated : 01 Dec 2014 09:47 AM

மதுரை திமுக-வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: அழகிரி ஆதரவாளர்கள் 60 பேர் கருணாநிதியிடம் நேரில் மனு

உட்கட்சி தேர்தலில் மதுரை திமுக நிர்வாகிகள் குறைந்தபட்ச ஜன நாயகம்கூட இல்லாமல் நடந்து கொள்வதாக அழகிரி ஆதரவாளர்கள் 60 பேர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

முன்பு அழகிரியின் ஆளுமைக் குள் இருந்த மதுரை திமுக இப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கையில் இருக்கிறது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழுவில் தளபதி உள்ளிட்ட அத்தனை பொறுப்பாளர்களுமே இப்போது ஸ்டாலினின் ஆதரவாளர்கள். இதனால், உட்கட்சித் தேர்தலில் கட்சியின் கீழ்மட்ட அளவிலும் அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளுக்கும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவி களுக்கு அண்மையில் நியமனங் கள் மூலமாக நிர்வாகிகளை நிய மித்துள்ளனர். இவற்றில் அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலான வர்களுக்கு பதவி கொடுக்காமல் தவிர்த்திருக்கிறது எதிரணி. இதனால் பாதிக்கப்பட்ட 60 பேர் மாநகர் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் சிவகுமார், விவசாய அணித் தலைவர் துரைப் பாண்டியன், மண்டலத் தலைவர் சின்னான் உள்ளிட்டோர் தலை மையில் ஞாயிற்றுக்கிழமை, சென் னையில் திமுக தலைவர் கருணாநிதி யைச் சந்தித்து மனு கொடுத் துள்ளனர்.

புகார் கொடுத்தவர்களில் சிலர் ’தி இந்து’விடம் கூறிய தாவது: திமுக உட்கட்சி ஜனநாய கத்தை மதிக்கின்ற கட்சி. ஆனால், மதுரையில் இப்போது நடப்ப வைகளைப் பார்த்தால் உட்கட்சி ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது. இதுகுறித்த எங்களின் கவலையை தலைவரிடம் முறையிட்டோம். 'எல்லாரையும் கலந்து பேசித்தான் முடிவு எடுப்போம் . முரசொலியில் அறிவிப்பு வரும்போதுதான் பட்டியல் இறுதி செய்யப்படும். உங்க புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்’னு சொல்லி இருக்கிறார். பேராசிரிய ரிடமும் டி.கே.எஸ்.இளங்கோவனிட மும் மனு கொடுத்துவிட்டு வந்தி ருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்டாலின் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் அழகிரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு திமுக-வுக்கு எதிராக வேலை பார்த்தனர். தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குக் கேட்டனர். இவர்கள்தான் இப்போது திமுக-வில் பதவி கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு எப்படி பதவி கொடுக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதனிடையே, மதுரை மாநகர் மாவட்டத்தில் ஸ்டாலின் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், “குற்றப் பின்னணி உள்ளவர்களுக் கும் ரவுடிகளுக்கும் கட்சி யில் முக்கியப் பதவிகளை கொடுத் துள்ளனர். இதை தவிர்க்க வேண்டும்” என கட்சிப் பொறுப் பாளர்கள் சிலர் ஸ்டாலினிடம் மனு கொடுத்துள்ளனர். இதை யடுத்து, குற்றப் பின்னணி உள்ளவர் களை பதவியிலிருந்து உடனடி யாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி முக்கிய நிர்வாகி களுக்கு ஸ்டாலின் உத்தர விட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x